நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரௌபதி முர்மு..!

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரௌபதி முர்மு..!;

Update: 2022-07-25 11:45 GMT

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இதன் மூலம், நாட்டின் 15 வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2 வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரௌபதி முர்மு பெறுகிறார்.

இந்நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக திரௌபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு, திரௌபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரௌபதி முர்முவுக்கு ராம்நாத் கோவிந்த் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மைய வளாகத்தில் நாட்டின் 15 வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி ஏற்றார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, திரௌபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


அதன் பின்னர் திரௌபதி முர்மு பேசியதாவது; “இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் எனது வலிமை. இந்த பதவியை கவுரவிக்கும் வகையில் செயல்படுவேன்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Similar News