இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார் திரௌபதி முர்மு!!
இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார் திரௌபதி முர்மு!!
இன்று காலை 10.15 மணிக்கு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்கிறார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசு தலைவர் பதவி ஏற்புக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்போடு நாடாளுமன்றம் அழைத்துவரப்படுவார்.
அதன் பின்னர் பதவி ஏற்பு விழா தொடங்கும்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.
புதிய குடியரசுத் தலைவரின் உரை முடிந்த பின்னர் குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்புடன் குடியரசு தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும், 64 வயதான முர்மு நாட்டின் இளம் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
newstm.in