ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் போதை விருந்து.. பிரபல நடிகை, பாடகர் உட்பட 144 பேர் சிக்கினர்..!

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் போதை விருந்து.. பிரபல நடிகை, பாடகர் உட்பட 144 பேர் சிக்கினர்..!

Update: 2022-04-04 14:04 GMT

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் நடைபெறும் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முதலில் அந்த ஹோட்டலின் இ-மெயிலுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

இதையடுத்து ஹோட்டல் தரப்பிலிருந்து, எந்த மேஜை ஒதுக்கப்பட்டுள்ளது என அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வரும். அதை செக்யூரிட்டிகளிடம் காட்டினால் மட்டுமே ஹோட்டலுக்குள் அனுமதிப்பார்கள்


இந்த ஹோட்டலில், நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஹோட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார்  அந்த ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கு போதை விருந்தில் கலந்து கொண்ட 144 பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆந்திர மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திர மாநில முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.

இவர்களுக்கு அந்த ஹோட்டலில் பிரவுன் சுகர், கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த ஹோட்டலில், வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொக்கைன் பறிமுதல் செய்தனர்.

நிகாரிகாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார்  பின்னர் அவரை விடுவித்தனர். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்கின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நிகாரிகா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News