மது போதையில் பயணி தகராறு.. பாதி வழியில் தரையிறங்கிய விமானம்..!
மது போதையில் பயணி தகராறு.. பாதி வழியில் தரையிறங்கிய விமானம்..!
மது போதையில் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது.
கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த முகமது சர்புதீன் உல்வார் என்ற பயணி வந்தார்.
இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து உள்ளார். மேலும், விமானத்தில் மது குடிக்க முயன்ற போது, அதை விமான பணிப்பெண் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், பணிப்பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர், பயணிகளுடன் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து விமானம் அவசரமாக மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணியை கைது செய்தனர். மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.