சுப்ரீம் கோர்ட்டில் இபிஎஸ் மேல்முறையீடு.. மனுவில் என்ன இருக்கு..? - முழு விவரம்..!
சுப்ரீம் கோர்ட்டில் இபிஎஸ் மேல்முறையீடு.. மனுவில் என்ன இருக்கு..? - முழு விவரம்..!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அந்த மனுவில், “ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் செயல்பாடு எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக உள்ளது. கட்சி விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அதிமுக சட்ட திட்டங்களுக்கு எதிராகவும், கட்சி அதிகாரங்களை முடக்குவது போலவும் உள்ளது.
கட்சித் தலைமை குறித்து விவாதிக்கக்கூடாது என்ற உத்தரவு தனிப்பட்ட ஒருவருக்கு வீட்டோ அதிகாரம் வழங்குவது போல் உள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டால், அதிமுகவில் உள்ள ஜனநாயகம் சீர்குலைக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நடவடிக்கைகள் அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராக உள்ளது.
2,190 உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்.
இதனால், ஒற்றை தலைமை குறித்த விவாதத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்வரவில்லை. ஒற்றை தலைமை தான் கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க முடியம் என நம்புகின்றனர். எனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.