அதிமுக அலுவலகத்தில் இருந்த இபிஎஸ் படம் அகற்றம்..!

அதிமுக அலுவலகத்தில் இருந்த இபிஎஸ் படம் அகற்றம்..!

Update: 2022-06-26 06:30 GMT

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பூதாகரமாக வெடித்த நிலையில், கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தி, அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்தாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டமும், அவரது உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஓபிஎஸ் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடி அதிமுக அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை, போடி நகர செயலாளர் பழனிராஜ் அகற்றினார்.


மேலும், அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் படத்தை அதிமுகவினர் மை ஊற்றி அழித்தனர்.

அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓபிஎஸ் ஈடுபடாத நிலையில், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயர் நேற்று (24-ம் தேதி) அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News