அதிகாலை சோகம்.. தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதல்.. 3 பேர் பலி..!

அதிகாலை சோகம்.. தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதல்.. 3 பேர் பலி..!

Update: 2022-05-19 13:33 GMT

அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில், ஆசோதா சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

தொழிலாளர்கள், அந்த வழியாக செல்லும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில், தடுப்புகள் அமைத்தும், ஒளி பிரதிபலிப்பான்களை பொருத்தியும் தங்கள் பாதுகாப்பினை உறுதிபடுத்தியுள்ளனர்.

அப்படி இருந்தும், இந்த விபத்தானது, ஓட்டுநர் குடிபோதையில், அல்லது தூக்க கலக்கத்தில் இருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

லாரி பதிவு எண்ணைப் பயன்படுத்தி உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார், அவரிடம் இந்த சம்பவம் குறித்தும், ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News