ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வு.. சாலைகளில் மக்கள் தஞ்சம்.. நேரில் ஆய்வு !

ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வு.. சாலைகளில் மக்கள் தஞ்சம்.. நேரில் ஆய்வு !

Update: 2022-03-25 12:21 GMT

 

ஒட்டன்சத்திரம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் அடுத்த ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இன்று காலை மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம், கே.கீரணூர் பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், திடீரென சத்தம் கோட்டதாகவும் தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

இதனால், வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையோரங்களில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவி பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் உண்டாக்கியது. இதையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்றுள்ள கோட்டாட்சியர் சிவக்குமார், நிலநடுக்கம் ஏற்பட்டாத என விசாரணை நடத்தி வருகிறார். ஒட்டன்சத்திரம் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூரில் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டதாகவும் அச்சமாக உள்ளதாகவும் மக்கள் கூறி வந்தனர். சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அங்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் நிலஅதிர்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

Similar News