சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி 30 முதல் 40 லாரிகளில் பூக்கள் வருகின்றன.
இந்நிலையில், நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு மல்லிகைப்பூ 300க்கு விற்பனையானது. பன்னீர் ரோஸ் 100, சம்பங்கி 160 ரூபாய், சாக்லேட் ரோஸ் 180, அரளி 300, கனகாம்பரம் 500 முதல் 600, சாமந்தி 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று 300 ரூபாய்க்கு விற்ற மல்லி இன்று 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி 120 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.
பன்னீர் ரோஸ் 100ல் இருந்து 60 முதல் 80 வரை விற்பனையாகிறது. அரளி 300ல் இருந்து 200க்கும், கனகாம்பரம் 500ல் இருந்து 400க்கும், சாக்லேட் ரோஸ் 180ல் இருந்து 140க்கும் விற்பனை செய்யப்பட்டன
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் பொருளாளர் பெருமாள் கூறுகையில், “நாளை கொண்டாடப்பட உள்ள ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு மல்லி, சாமந்தி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலை நேற்று விற்பனை செய்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.