தோல்வி எதிரொலி.. தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து..!

தோல்வி எதிரொலி.. தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து..!

Update: 2022-03-16 12:04 GMT

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப்பில், ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.

தேர்தலில் தோல்வியைச் சந்தித்த 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்குப் பொறுப்பேற்று, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார்.
 

Tags:    

Similar News