போர் எதிரொலி....இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்தது..!!

போர் எதிரொலி....இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்தது..!!;

Update: 2022-02-24 16:01 GMT

ஒவ்வொரு இந்திய பெண்கள் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்துள்ளது இந்த தங்கம் என்று சொல்லலாம். குண்டுமணி அளவாவது தங்கம் சேர்க்க வேண்டும் என்பதே நம்மில் ஒவ்வொருவரின் கனவாகும். இதை அணிகலனாக அணிவது தனிநபரின் பெருமையைப் பறைசாற்றுவதாக உள்ளது.தங்கத்தை அனைவரும் விரும்பு வதற்கு முக்கியமான காரணம், அதை விரைவாகப் பணமாக்கிக்கொள்ள முடியும் என்பதே ஆகும். கடன் வாங்குவதற்கு முக்கியமான காரணம், நகைகளை அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்க உதவும் என்பதால்தான்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874 க்கும், சவரன் ரூ.38,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 1,240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,992-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874 விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,719 க்கு விற்பனையானது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு 155 ரூபாய் அதிகமானது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,700 ரூபாய் உயர்ந்து  ரூ.71,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News