பாஜகவின் செய்தித் தொடர்பாளராக மாறிய எடப்பாடி பழனிசாமி - திருமாவளவன் பேச்சு..!!

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக மாறிய எடப்பாடி பழனிசாமி - திருமாவளவன் பேச்சு..!!

Update: 2022-02-14 04:20 GMT

சென்னை அசோக் நகரில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

அதிமுக கூட்டணி சிதறி விட்டது என்றும் திமுக கூட்டணி மிகவும் பலமாக இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் என்றார்.  

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லதல்ல நாட்டை நாசகார பாதையில் அழைத்துச் செல்லும் என்றும் உத்திரபிரதேசத்தில் புராணத்திற்காக பல்கலைக்கழகத்தை கட்டுவது பாஜக பாசிசப் போக்கை காட்டுகிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது என தொடர்ந்து விமர்சித்து வருகிறோம் என கூறிய அவர், பாஜகவின் செய்தித் தொடர்பாளராக  எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்றார்.

Similar News