தனிமைப்படுத்தி கொண்டார் எடப்பாடி பழனிசாமி..!!

தனிமைப்படுத்தி கொண்டார் எடப்பாடி பழனிசாமி..!!

Update: 2022-06-29 04:45 GMT

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முகாம் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அதேபோல முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அவரது மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரிய அறிகுறிகள் இல்லாத சூழலிலும் அவருக்கு லேசான தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Similar News