உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!!

உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!!

Update: 2022-04-13 10:36 GMT

சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, பேசிய அமைச்சர் . .வேலு, சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை வரை ரூபாய் 485 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்றார்.

குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூபாய் 322 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். பாடி மேம்பாலம் அருகே ரயில்வே மேம்பாலம் ரூபாய் 100 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும் என்று கூறினார்.

தாம்பரம் சண்முகம் சாலை அருகே ரூபாய் 10 கோடி மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கப்படும். பொதுப்பணித்துறையில் 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்" எனத் தெரிவித்தார்

அதைத் தொடர்ந்து, கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினர்.

.தி.மு.. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்து, உதயநிதியின் கார் தன்னுடைய கார் என்று நினைத்து, அதில் ஏற முயன்றார்.

அப்போது அவரது பாதுகாவலர்கள் இது நமது கார் இல்லை என்ற கூற, அதற்கு எடப்பாடி பழனிசாமி ' அந்த வண்டியா, சாரி' என்று கூறிவிட்டு, தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

newstm.in

Similar News