அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன், கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். அப்போது, அங்கு கூடி இருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர்.