நாளை முதல் அமல்..!! மெட்ரோ சேவையில் புதிய மாற்றம்..!!

நாளை முதல் அமல்..!! மெட்ரோ சேவையில் புதிய மாற்றம்..!!

Update: 2022-03-16 15:39 GMT

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் பீக் ஹவர் என அழைக்கப்படும் உச்ச நேரங்களில்  காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். பீக் ஹவர் தவிர்த்த மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ சேவை வழங்கப்பட உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில்  காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Similar News