எழும்பூர் எஸ்ஐ தொல்லை கொடுக்கிறார்.. 2 பெண்கள் உட்பட 5 பேர் தற்கொலை முயற்சி..!

எழும்பூர் எஸ்ஐ தொல்லை கொடுக்கிறார்.. 2 பெண்கள் உட்பட 5 பேர் தற்கொலை முயற்சி..!

Update: 2022-04-01 20:55 GMT

சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முதல் நுழைவு வாயில் முன்பு நேற்றிரவு, 2 பெண்கள் உட்பட 5 பேர் தங்கள் கைகள் மற்றும் உடலில் பிளேடால் அறுத்துக் கொண்டும், உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூச்சலிட்டனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள் உடனே அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விட்டு, இதுகுறித்து வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது அவர்கள், எழும்பூர் காவல் நிலையம் அருகில் பிளாட்பாரத்தில் வசித்துவரும் ஆல்பர்ட் (30), தினேஷ்குமார் (22), சஞ்சய் (19), சிவரஞ்சனி (25), ரேணுகா (55) ஆகியோர் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், எழும்பூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவர் தங்கள் மீது தேவை இல்லாமல் வழக்குப்பதிவு செய்வேன் எனக் கூறி மிரட்டி தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News