வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த முதியர் வெட்டிக்கொலை.. வளர்ப்பு மகளிடம் விசாரணை !!
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த முதியர் வெட்டிக்கொலை.. வளர்ப்பு மகளிடம் விசாரணை !!
மதுரை தல்லாகுளம் பகுதியில் கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வளர்ப்பு மகளான நிவேதா என்ற பெண்ணுடன் வீட்டில் வசித்துவந்த நிலையில், நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் இன்று கிருஷ்ணாராம் வீட்டில் அறையில் தூங்கிகொண்டிருந்தார். எனினும் விடிந்து நீண்டநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை என்பதால் அவரது மனைவி அறைக்கு சென்று பார்த்தார். கதவை திறந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் சடலமாக காணப்பட்டார்.
இதனையடுத்து மனைவி பங்கஜவள்ளி தல்லாகுளம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. இதனால் அவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
முதற்கட்டமாக தம்பதிகளின் வளர்ப்பு மகள் மற்றும் மருமகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
newstm.in