வேலூரில் பரிதாபம்.. எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை - மகள் பலி..!
வேலூரில் பரிதாபம்.. எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை - மகள் பலி..!
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில், எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபமாக பலியாகினர்.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக இந்தியா முழுவதும் தற்போது எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரைவர்மா (49). கேபிள் ஆபரேட்டரான இவருக்கு 13 வயது மகள் இருந்தார். எலக்ட்ரிக் பைக் வைத்திருந்த துரை வர்மா நேற்று இரவு தனது வீட்டில் பைக்கை நிறுத்தி சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
நள்ளிரவில், திடீரென எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்தில் இருந்து தப்பிக்க போராடிய துரைவர்மாவும் அவருடைய மகளும் மூச்சுத்திணறி பலியாகினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.