#BIG NEWS :- ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தம்.. எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு..!
#BIG NEWS :- ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தம்.. எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு..!
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில், ட்விட்டர் தளத்தை வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பை அடுத்து ட்விட்டர் நிறுவன பங்குகளின் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது. எலான் மஸ்கின் கருத்து குறித்து ட்விட்டர் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை. 3.34 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.