ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்த எலான் மஸ்க்..!!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்த எலான் மஸ்க்..!!

Update: 2022-04-15 04:05 GMT

 உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் ட்விட்டர் நிறுவனத்தின் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9% பங்குகளை வாங்கியதை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மஸ்கை ட்விட்டர்  இயக்குனர் குழுவில் இணைத்தார்.

பின்னர் கடந்த 11-ஆம் தேதி எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்தார். டுவிட்டர் பங்குகளை வாங்குவதற்கான தொகை குறித்து நடந்த கருத்து வேறுபாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் மஸ்க் மீண்டும் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளார். இதற்காக அவர் கடைசியாக ஒரு தொகையை நிர்ணயித்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை அவர் இறுதியாக செலுத்தி டுவிட்டர் பங்குகளை வாங்க தயாராக இருப்பதாகவும் இந்த தொகையும் மறுக்கப்பட்டால் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News