இந்த படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு.. யுஜிசி அறிவுறுத்தல்..!

இந்த படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு.. யுஜிசி அறிவுறுத்தல்..!

Update: 2022-03-28 10:44 GMT

நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துமாறு பல்கலைக் கழங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இளநிலை பட்டப்படிப்புகளில் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலோ அல்லது நுழைவுத் தேர்வுகள் மூலமாகவோ பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன.

இவ்வாறு பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஒரு சில சமயங்களில் வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுவதும் உண்டு.

இதுபோல், பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையிலும், பல பாடத்திட்டங்களில் படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதமாகவும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) நடத்த யுஜிசி முடிவு செய்துள்ளது.

எனவே, அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முறையை நடப்பாண்டு (2022 - 2023) முதல் அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News