நுழைவுக் கட்டணம் உயர்வு.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!
நுழைவுக் கட்டணம் உயர்வு.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியான பழக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில், கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியான 62-வது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பூத்துக் குலுங்குகிறது.
அத்துடன், பழங்களால் உருவாக்கப்பட்ட கழுகு, பாண்டா கரடி, தாஜ்மஹால், ராட்சத மீன் உருவம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது.
இதை கண்டுகளிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும், சிறுவர்களுக்கு 25 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழக்கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணத்தை திடீரென உயர்த்தி இருப்பது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.