தமிழக பேருந்துகளில் விரைவில் இ-டிக்கெட் சேவை அறிமுகம்..!!

தமிழக பேருந்துகளில் விரைவில் இ-டிக்கெட் சேவை அறிமுகம்..!!

Update: 2022-06-07 13:15 GMT

திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பல அதிரடியான திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதனால், பல்வேறு சலுகைகள் மக்களுக்கு அறிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் என்று பல திட்டங்களை அமல்படுத்திப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, நகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவரச அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சிசிடிவி கேமரா மற்றும் அவரச அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட சுமார் 500 பேருந்துகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் பயணச்சீட்டிற்கு பதிலாக ‘இ-டிக்கெட்’ சேவை அறிமுக்கப்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்த உடன், ஜிபே, மொபைல் ஸ்கேனிங் மூலம் பேருந்துகளில் டிக்கெட் பெறலாம்” என்றார்.

மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும், அதுவரை பழைய பயண அட்டையை பயன் படுத்தி பயணம் செய்யலாம். ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Similar News