இனி 2ஆவது பெண் குழந்தை பிறந்தாலும் உதவித் தொகை!!
இனி 2ஆவது பெண் குழந்தை பிறந்தாலும் உதவித் தொகை!!
இனி வரும் காலங்களில் 2வது பெண் குழந்தை பிறந்தாலும் பெண்களுக்கு உதவித் தொகை கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, “பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா" என்ற திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்குதல் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை அளித்தல் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்தாலும் இனி உதவித்தொகை பெற முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்ரு வந்தன யோஜனா திட்டத்தில் 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் உதவித்தொகையாக ரூ. 5000 பெறுவார்கள். கூடவே மருத்துவ வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகின்றன.
குழந்தை பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெறலாம். இந்நிலையில், 2வது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களும் இனி இந்த சலுகைகளை பெற முடியும்.
இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் சின்ன திருத்தங்களும் செய்யப்படவுள்ளன. அதாவது முதல் குழந்தைக்கு உதவித்தொகை 2 தவணைகளாக வழங்கப்படும்.
ஆனால் 2வது பெண் குழந்தை திட்டத்தில் உதவித்தொகை முழுத்தொகையாக குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும். இந்த அறிவிப்பு வெளியான போதே பெண்கள் பலரும் இதை வரவேற்று இருந்தனர்.
newstm.in