வெற்றினா இப்படி இருக்கனும்.. லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பு பரிசளித்த கமல் !!
வெற்றினா இப்படி இருக்கனும்.. லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பு பரிசளித்த கமல் !!
விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கமல் ஹாசன் காரைப் பரிசளித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதோடுமட்டுமல்லாமல், நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 150 கோடி வசூலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் திரைப்படம் வெளியானதையும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
ஒட்டுமொத்தத்தில் கமல் ஹாசனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அளித்ததால் அதற்கு மதிப்பளிக்கும் விதமாக கமல்ஹாசன் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லோகேஷ்க்கு கமல்ஹாசன் வியப்பளிக்கும் பரிசு ஒன்றை அளித்து வியக்கவைத்துள்ளார்.
ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு காரான லெக்ஸஸை லோகேஷ் கனகராஜுக்குப் பரிசாக வழங்கிக் கெளரவித்துள்ளார்.
newstm.in