பரபரப்பு! திமுக வட்டச் செயலாளர் வெட்டிக்கொலை!!
பரபரப்பு! திமுக வட்டச் செயலாளர் வெட்டிக்கொலை!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில், திமுகவின் சென்னை மடிப்பாக்கம் வட்ட செயலாளர் செல்வம் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலையான செல்வம் மடிப்பாக்கம் 188ஆவது வட்ட திமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். கோஷ்டி மோதல் ஏதும் இந்த கொலைக்கு காரணமா என்ற கோணத்திலும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் இந்த படுகொலைக்கு காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியலில் செல்வத்தின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற நிலைமை உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
newstm.in