சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தண்டையார் நகர் பகுதியைச் சார்ந்த ஜீவன் குமார் என்பவர் நேற்று நள்ளிரவு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டி விட்டு தப்பி சென்றது.
தகவல் அறிந்த புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஜீவன் குமாரை ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜீவன் குமார் உயிரிழந்தார். இவர் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக ஒருவரை வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில் ஜீவன் குமாரை அடையாளம் தெரியாத கும்பல் கொலை செய்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in