பரபரப்பு! பெண் எஸ்.ஐ. விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!
பரபரப்பு! பெண் எஸ்.ஐ. விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!
அரியலூரில் பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்துறை ரவுண்டானா அருகில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
விசாரணையில், செடி கருகி போகச் செய்யும் பூச்சி மருந்தை குடித்ததாக அவர் கூறினார். லெட்சுமி ப்ரியா சுயநினைவை இழந்து, அவரது உடல்நிலை மோசமானதையடுத்து உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும் அவர் உடல்நிலை அபாய நிலையில் உள்ளதால் தொடர்ந்து தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் லெட்சுமி பிரியா திருச்சியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.
பணியின் தொடர்பாக ஏதாவது பிரச்னை இருந்துள்ளதா இல்லை உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லையினால் தற்கொலைக்கு முயன்றாரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in