பரபரப்பு! காணாமல் போன பெண் மதபோதகர் எலும்பு கூடாக கண்டெடுப்பு!!

பரபரப்பு! காணாமல் போன பெண் மதபோதகர் எலும்பு கூடாக கண்டெடுப்பு!!

Update: 2022-06-22 09:23 GMT

தாம்பரம் அருகே 25 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண் மதபோதகர் வனப்பகுதியில் எலும்பு கூடாக  கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலையூர் மதுரபாக்கம் கிராமத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற ஒருவர்அழுகிய நிலையில் எலும்பு கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற போலீசார் எலும்பு கூடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சமீபத்தில் காணாமல் போனவர்களைப் பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அகரம் பகுதியை சேர்ந்த ஏஞ்சலின் என்பவர் மதபோதகரான தனது  தாய் எஸ்தர் (55)  என்பவரை கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் காணவில்லை என கடந்த 8ஆம் தேதி சேலையூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அவர் எப்பொழுதும் பெருங்களத்தூரில் உள்ள  சபைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி சபைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார்.

தற்போது அடர்ந்த வனப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்டெடுத்தது எஸ்தர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் எஸ்தர்  உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி காணாமல் போன எஸ்தர் எப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தார். அவரை யாரேனும் கடத்திச் சென்று கொலை செய்து வனப்பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றனரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News