பரபரப்பு! டெல்லி சென்றார் ஓ.பன்னீர்செல்வம்!!

பரபரப்பு! டெல்லி சென்றார் ஓ.பன்னீர்செல்வம்!!

Update: 2022-06-24 06:15 GMT

.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை கருத்துக்கு .பன்னீர் செல்வம் தரப்பு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதனையடுத்து, .தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தடைஉத்தரவு ஏதும் பிறப்பிக்காத நிலையில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், .தி.மு. பொதுக்குழுவில் புதிய தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. அதில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மீண்டும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும்,  அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதனையடுத்து, .தி.மு. பொதுக்குழு கூட்டத்திலிருந்து .பன்னீர் செல்வம் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர். அதனையடுத்து, .பன்னீர் செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனித்தனியாக முகாமிட்டனர்.

இந்தநிலையில், .பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளார். அங்கு தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

newstm.in

Similar News