பரபரப்பு! காவல் நிலையத்திற்கு தீ வைத்து கொளுத்திய மக்கள்!!
பரபரப்பு! காவல் நிலையத்திற்கு தீ வைத்து கொளுத்திய மக்கள்!!
அசாம் மாநிலம் நகோவான் பகுதியில் உள்ள பதாத்ரபா காவல்நிலையத்தை அப்பகுதி மக்கள் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக் கிழமை சபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் விசாரணையின் போது உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினரும் அப்பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தீவைத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட ஐந்து குடும்பங்களின் வீடுகளை நகோவான் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. தாக்குதல் குறித்த முழு ஆதாரத்தையும் திரட்டி வருவதாக அசாம் மாநில டிஜிபி கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் பெண்கள்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Assam | Nagaon District Administration demolished houses of five families who were allegedly involved in setting fire to Batadraba Police Station yesterday, May 21 pic.twitter.com/N0u9xMg0ZW
— ANI (@ANI) May 22, 2022
newstm.in