பரபரப்பு! பிரபல அரசியல் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!!

பரபரப்பு! பிரபல அரசியல் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!!

Update: 2022-02-04 08:22 GMT

அகில இந்திய மஜ்லீஸ் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சி போட்டியிடுவதால் இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாக பிரிந்து பாஜகவுக்கு சாதகமாகி விடும் என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மேலும், பாஜகவுக்கு மறைமுகமாக உதவி செய்வதற்காகவே முஸ்லிமின் கட்சி உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போட்டியிடுவதாகவும், அக்கட்சி பாஜகவின் 'பீ' டீம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதனால் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசிக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில், மீரட்டில் உள்ள கிதோர் பகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு அசாதுதீன் ஒவைசி வாக்கு சேகரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அதன் பிறகு, தனது காரில் அவர் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சஜ்ஜார்சி சுங்கச்சாவடியை நெருங்கிய போது, அங்கிருந்த மர்ம நபர்கள் ஒவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.


அவரது காரை 5-க்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. எனினும், நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். தனது கார் மீது 3 முதல் 4 பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றதாக அவர் கூறியுள்ளார். துப்பாக்கியால் சுட்டதில் கார் டயர்கள் பஞ்சராகின என்றும் மற்றொரு காரில் ஏறி டெல்லி திரும்பியதாக கூறியுள்ளார்.

newstm.in

Similar News