பரபரப்பு! பிரபல நடிகரை நோக்கி துப்பாக்கிச்சூடு!!

பரபரப்பு! பிரபல நடிகரை நோக்கி துப்பாக்கிச்சூடு!!

Update: 2022-07-13 20:36 GMT

கன்னட நடிகர் சிவரஞ்சன் போலன்னவர மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவரஞ்சன் போலன்னவர அமிர்தா சிந்து, வீர பத்ரா போன்ற கன்னடப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பெலகாவியில் உள்ள தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது.

சுதாரித்துக் கொண்ட அவர் மீது துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பினார். அங்கிருந்தவர்கள் அந்த கும்பலை விரட்டினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிவரஞ்சன் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை அரங்கேற்றிய கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்விரோதமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News