பரபரப்பு! கடற்கரையில் நிர்வாணமாக கரை ஒதுங்கிய பெண்ணி உடல்!!
பரபரப்பு! கடற்கரையில் நிர்வாணமாக கரை ஒதுங்கிய பெண்ணி உடல்!!
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் கடற்கரையில் பெண்ணின் உடல் நிர்வாணமாக கரை ஒதுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பன் குந்துகால் கடற்கரையில் அதிகாலையில் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்பொழுது கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கிய பெண்ணின் உடலை பார்த்தனர்.
இறந்த பெண்ணின் உடல் முழுவதும் தோல்கள் உரிந்து ஊறிப் போன நிலையில் சிதைந்து காணப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் தங்கச்சிமடம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவல்துறை மற்றும் கடலோர காவல்படை காவல்துறையினர் உடலை பார்த்து விட்டு இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஆகிருக்கலாம் என்று கூறினர்.
இலங்கையில் விண்ணைத்தொடும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருவதால் தனுஷ்கோடி வழியாக அகதிகளாக இலங்கையில் உள்ளவர்கள் தமிழகத்திற்கு வருகின்றனர்.
இவ்வாறு இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வரும்பொழுது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இறந்திருக்க கூடுமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் மற்றும் நடுக்கடலில் ஏதேனும் படகு கவிழ்ந்து உள்ளதா என்று ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் மரைன் போலீஸார் தேடி வருகின்றனர்.
newstm.in