பரபரப்பு! பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து குதறிய நாய்!!

பரபரப்பு! பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து குதறிய நாய்!!

Update: 2022-03-16 10:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வெறிநாய் தெருவில் சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அண்மையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்து குதறியது. குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் தெருநாய் மக்களை கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது. பங்காரம்மா கண்டிகை பகுதியில் தெருநாய் ஒன்றுக்கு வெறிபிடித்து சாலையில் சென்ற மக்களை விரட்டி விரட்டி கடித்தது.

வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலத்த காயமடைந்த 5 பேர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

newstm.in

Similar News