பரபரப்பு! அலுவலகம் வந்தவரை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்!!
பரபரப்பு! அலுவலகம் வந்தவரை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனது அவலகத்திற்கு வந்த நபரை வழக்கறிஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் என்ற வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு வழக்கு சம்பந்தமாக கடந்த 21ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் பிரகாசபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் உத்தம்சிங் என்பவர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவருடன் சென்றதாக கூறப்படுகிறது.
அந்தோணிராஜ் உத்தம் சிங் வருகைக்காக காத்திருந்த நெல்சன், அவர் தாமதமாக வந்ததால் கடுமையாக திட்டியுள்ளார். இதுபோல் கால தாமதமாக வக்கீல் வந்தாலும் கவர்னரே வந்தாலும் வெளியே செல்லுங்கள் என்பேன் என்று பேசியுள்ளார்.
இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நெல்சன் தனது அலுவலகத்தில் இருந்த கத்தியை எடுத்து அந்தோணிராஜ் உத்தம்சிங் மற்றும் அவருடன் வந்த வழக்கறிஞரையும் வெளியே செல்லுமாறு மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் புகார் மனுவை பதிவு செய்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வழக்கறிஞர் நெல்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீஸார் நெல்சன் மீது அந்தோணி ராஜ் உத்தம்சிங் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in