பரபரப்பு! வயலில் வேலை செய்து கொண்டிருந்த தந்தையை கொன்ற மகன்!!
பரபரப்பு! வயலில் வேலை செய்து கொண்டிருந்த தந்தையை கொன்ற மகன்!!
மகாராஷ்டிரா மாநிலம், மோகடா பகுதியைச் சேர்ந்த பாண்டு சாவ்ஜி என்பவரின் மகன் காசிநாத் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாண்டு சாவ்ஜி அப்பகுதியில் உள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் காசிநாத் தனது தந்தையிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த காசிநாத் அங்கிருந்த கோடாரியை எடுத்து தந்தை என்றும் பாராமல் பாண்டு சாவ்ஜி மீது கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டு சாவ்ஜி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து கொலை செய்த மகன் மீது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள காசிநாத்தைத் தேடி வருகின்றனர்.
மேலும்,பாண்டு சாவ்ஜியை அவரது மகனே ஏன் அடித்து கொலை செய்தார் என்பது குறித்தும் அவரது தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in