பரபரப்பு! படுகொலை செய்து மணலில் புதைக்கப்பட்ட இளைஞர்!!

பரபரப்பு! படுகொலை செய்து மணலில் புதைக்கப்பட்ட இளைஞர்!!

Update: 2022-03-09 07:00 GMT

கன்னியாகுமரியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை படுகொலை செய்து ஓடை மணலில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அயன்கோடு ஊராட்சிமன்ற தலைவர் செல்லப்பன் என்பவரின் மகன் லிபின் ராஜா (23) முதலாம் ஆண்டு சட்டம் பயின்று வந்தார். இவர்மீது அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முன்விரோதத்தை சரிசெய்ய நண்பர்கள் லிபின்ராஜாவை அழைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை, செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்லப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகள் மூலமாக தேடுதலை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீசாருக்கு எழுந்தது. அதைப்போலவே நெல்லை மாவட்டம் பழவூர் நான்கு வழிச்சாலை அருகிலுள்ள நீர்ஓடை மணலில் உடல் அழுகிய துர்நாற்றமும் வீச துவங்கியது.

ஆனால் இரண்டு நாட்களாகியும் இன்னும் உடலை கூராய்வு செய்யவில்லை. இரண்டு நாட்களாக செல்லப்பன் காத்திருக்கிறார். தன் மகனை இறுதியாக ஒருமுறையாவது பார்த்துவிட்டு நல்லடக்கம் செய்ய வேண்டுமென தவமாய் தவமிருந்து வருகிறேன். அதிகாரிகளின் தாமதம், வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.

அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நெல்லையில் மருத்துவர்கள் வேறு பணிக்கு சென்றுவிட்டதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இன்று உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

newstm.in

Similar News