பரபரப்பு! கத்திரிக்கோலால் கணவனை குத்திக் கொன்ற மனைவி!!
பரபரப்பு! கத்திரிக்கோலால் கணவனை குத்திக் கொன்ற மனைவி!!
குடும்ப சண்டை காரணமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மனைவி கணவனை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள்.
வினோத் குமாரின் மனைவி வீட்டிலேயே தையல் மிஷின் வைத்து துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வினோத் குமார், மனைவி மீது சந்தேகம் அடைந்து, அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இதேபோல் நேற்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு, மனைவியை வினோத்குமார் தாக்கியுள்ளார். அப்போது அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவி கணவனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
அலறல் சத்தம்கேட்டு வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கிபாளையம் போலீசார் வினோத் குமாரின் மனைவி மகாலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in