பரபரப்பு! கணவன் மீது தீ வைத்த மனைவி கைது!!

பரபரப்பு! கணவன் மீது தீ வைத்த மனைவி கைது!!

Update: 2022-07-11 08:40 GMT

குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மீது மனைவி தீ வைத்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்த லிங்கநாதன்(40) - அங்கயற்கண்ணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஏழு வயதில் மகள் இருக்கிறாள்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் லிங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது மனைவி அங்கயற்கண்ணி தீ வைத்தார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கே சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்அதில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், கணவனை மனைவியே தீ வைத்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, போலீஸார் லிங்கநாதன் மனைவி அங்கயற்கண்ணியை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News