பரபரப்பு.. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பஸ் மீது தாக்குதல்..!

பரபரப்பு.. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பஸ் மீது தாக்குதல்..!

Update: 2022-03-17 06:45 GMT

மும்பையில் வரும் 26-ம் தேதி 15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 27-ம் தேதி எதிர்கொள்கிறது.

இதற்காக, டெல்லி அணியின் வீரர்கள் தற்போதே மும்பை சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் பயணிப்பதற்காக அந்த அணி சார்பில் சொகுசு பஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பஸ் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ளது.

இந்நிலையில், மும்பையின் கொலபா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சொகுசு பஸ்சின் கண்ணாடி மீது நேற்று இரவு சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பஸ் மீது தாக்குதல் நடத்திய மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News