பரபரப்பு.. பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை..!

பரபரப்பு.. பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை..!

Update: 2022-03-26 06:10 GMT

தூத்துக்குடியில், பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. லாரி டிரைவரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு  வந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம்  தொடர்பாக வடபாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல், தூத்துக்குடி ஓம்சக்தி நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரை  நகைக்காக மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விட்டு தப்பிச்  சென்றனர்.

தூத்துக்குடியில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News