பரபரப்பு.. பாலியல் தொல்லையால் பெண் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி !!

பரபரப்பு.. பாலியல் தொல்லையால் பெண் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி !!

Update: 2022-02-03 17:45 GMT

புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். இப்பெண் அளித்த புகார் அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்தில் இவருக்கு சக ஊழியரால் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பாக அப்பெண் புகார் அளித்தாக கூறப்படுகிறது. இப்புகார் மீது விசாரணை நடத்த தலைமை செயலகம் உத்தரவிட்டது.

இதனிடையே அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரை சாதி ரீதியாக திட்டியதாக, இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. உருளையன் பேட்டை போலீஸார் எஸ்.எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் பெற்ற அப்பெண் ஊழியர் மீண்டும் பணிக்கு சென்று வந்துள்ளார். அங்கு மிரட்டல்கள் தொடர்ந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில்தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை நடத்ததி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் உண்மையில் நடந்தது என்ன? பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதா? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in
 
 

Similar News