பரபரப்பு.. பாதியில் நின்றது அரசு ஆஸ்பத்திரி லிஃப்ட்.. பதற்றத்தில் நோயாளிகள்..!
பரபரப்பு.. பாதியில் நின்றது அரசு ஆஸ்பத்திரி லிஃப்ட்.. பதற்றத்தில் நோயாளிகள்..!
தென் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜாஜி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள லிஃப்ட் இன்று காலை திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. இதையடுத்து, லிஃப்டில் இருந்த நோயாளிகள் கூச்சலிட்டனர்.
லிஃப்டில் இருந்து சத்தம் வருவதைக் கேட்ட மற்ற நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் மூலம் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அதற்குள், மருத்துவமனையில் இருந்த தொழில்நுட்ப பணியாளர்கள் லிஃப்டை சரி செய்தனர். இதையடுத்து, சுமார் 20 நிமிடங்களாக லிஃப்டில் சிக்கிய 3 நோயாளிகள் மீட்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.