பரபரப்பு.. கிறிஸ்தவர்கள் மீது விபூதி வீசிய இந்து முன்னணி அமைப்பினர்..!
பரபரப்பு.. கிறிஸ்தவர்கள் மீது விபூதி வீசிய இந்து முன்னணி அமைப்பினர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அப்பகுதியில் உள்ள இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக ‘நேசிக்கின்ற கொலைகாரன்’, ‘தெய்வ சத்தம்’, என்ற தலைப்பில் பிட் நோட்டீஸ்களை வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், ‘நீங்கள் எப்படி இந்த நோட்டீசை வழங்கி இந்துக்களை மதமாற்றத்தில் ஈடுபடு வைப்பீர்கள்..?’ என்று கிறிஸ்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்கள் மீது விபூதியை அள்ளி வீசினர்,
இதனால் பதற்றமடைந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார், சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்
இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக வந்தவர்கள் முகத்தில் விபூதியை வீசிய இந்து முன்னணி அமைப்பினரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.