சென்னையில் பரபரப்பு.. சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது..!

சென்னையில் பரபரப்பு.. சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது..!

Update: 2022-05-13 15:21 GMT

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பூபதி (40). இவருடன் 5 பேர் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல இண்டிகா காரில் தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வரத் தொடங்கியுள்ளது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட பூபதி காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கி விட்டனர்.

இதையடுத்து கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்து குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News