பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு !!

பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு !!

Update: 2022-03-05 12:05 GMT

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 11ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஎம் நகரச் செயலாளர் ரகுராமன் மனைவி ராமலோக ஈஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை திமுக தலைமை கூட்டணி சார்பில் நகராட்சி துணைத் தலைவராக அறிவித்தது.

இந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி தங்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக வேட்பாளர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதாவது, இந்த நிலையில் மார்ச்  4ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் அவரது வீட்டின் வாசலில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நேற்று மறைமுகத் தேர்தலின்போது, திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா செய்தார். திருத்துறைப்பூண்டி துணைத் தலைவர் பதவி சிபிஐஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ராஜினாமா செய்தார்.
 

newstm.in

 

Similar News