பயங்கரவாதி முகமது வலியுல்லா கானுக்கு தூக்கு..!!

பயங்கரவாதி முகமது வலியுல்லா கானுக்கு தூக்கு..!!

Update: 2022-06-07 14:55 GMT

வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி அன்று சங்கட் மோகன் கோவில் மற்றும் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கரவாதி முகமது வலியுல்லா கான் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டான். காசியாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 4-ம் தேதி நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகமது வலியுல்லா கான் குற்றவாளி என அறிவித்தது.

இந்நிலையில், வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News