கொரோனாவால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்
கொரோனாவால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுகிறது.
திருப்பதி-புதுச்சேரி (வண்டி எண்:16111) இடையே காலை 4.20 மணிக்கும், மறுமார்க்கமாக புதுச்சேரி-திருப்பதி(16112) இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும்.
சூலூர்பேட்டை- நெல்லூர்(06747) இடையே மதியம் 3.50 மணிக்கும், மறுமார்க்கமாக நெல்லூர்- சூலூர்பேட்டை(06748) இடையே மாலை 6.50 மணிக்கும், திருவனந்தபுரம் சென்டிரல்- நாகர்கோவில்(06433) இடையே காலை 6.50 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில்- திருவனந்தபுரம் சென்டிரல்(06428) இடையே மாலை 6.20 மணிக்கும் இயக்கப்படும்.
மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை(06743) இடையே மதியம் 1.15 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட்(06744) இடையே இரவு 8.45 மணிக்கும் புறப்படும். முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in